ஆன்மிகம்
விநாயகர்

சங்கடஹர சதுர்த்தியையொட்டி விநாயகர் கோவில்களில் சிறப்பு பூஜை

Published On 2021-09-25 04:00 GMT   |   Update On 2021-09-25 04:00 GMT
சங்கடஹர சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.
சங்கடஹர சதுர்த்தியையொட்டி கிருஷ்ணகிரி புதுப்பேட்டை பழைய சப்-ஜெயில் சாலை சித்தி விநாயகர் கோவிலில், நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. இதையொட்டி விநாயகருக்கு 608 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இதே போல், கிருஷ்ணகிரி காந்திசாலை வரசித்தி விநாயகர் கோவில், புதிய வீட்டு வசதி வாரியம் வினைதீர்த்த விநாயகர் கோவில், பழையபேட்டை கொத்தபேட்டா ஞான விநாயகர் கோவில், பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு வரசித்தி விநாயகர் கோவில், காந்திநகர் வலம்புரி விநாயகர் கோவில், சேலம் சாலை ஆதிசக்தி விநாயகர் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.
Tags:    

Similar News