ஆன்மிகம்
வழுதூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

ராமநாதபுரம் அருகே வழுதூர் மாரியம்மன் கோவில் முளைப்பாரி திருவிழா

Published On 2021-09-24 07:27 GMT   |   Update On 2021-09-24 07:27 GMT
வழுதூர் மாரியம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.
மண்டபம் ஊராட்சி ஒன்றியம் வழுதூர் கிராமத்தில் மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் முளைப்பாரி திருவிழா சிறப்பாக நடைபெறும். அதன்படி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இப்பகுதி மக்கள் காப்பு கட்டி முளைப்பாரி வளர்க்க தொடங்கினர்.

இதைத்தொடர்ந்து இதற்கான திருவிழாவில் அதிகமான பெண்கள் வளர்த்து வந்த முளைப்பாரியை தலையில் சுமந்தவாறு ஊர்வலமாக சென்று முக்கிய வீதிகளில் வலம் வந்து அம்மனுக்கு தங்களது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

இதைத்தொடர்ந்து அதிகமான மழை பெய்ய வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும், கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு உலகத்தில் வாழக்கூடிய அனைத்து மக்களும் சுபிட்சமாக வாழ ஆலயத்தில் பெண்கள் அனைவரும் சிறப்பு வழிபாடுகள் செய்தனர். இதைத்தொடர்ந்து ஆலயத்தில் இருந்து பெண்கள் ஊர்வலமாக சென்று ஊருணியில் முளைப்பாரி கரைக்கப்பட்டது.

Tags:    

Similar News