ஆன்மிகம்
கும்பாபிஷேக விழா

அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா

Published On 2021-09-24 04:01 GMT   |   Update On 2021-09-24 04:01 GMT
முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனார் கோவிலில் மூலஸ்தான சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
முதுகுளத்தூர் அருகே கீரனூர் கிராமத்தில் நிறைகுளத்து அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. நேற்று காலை விக்னேசுவர பூஜை, கணபதி ஹோமம், கும்ப அலங்காரம், கணபதி வழிபாடு, முதற்கால யாக பூஜை நடைபெற்றது. பின்னர் மூலஸ்தான சுவாமிகளுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.

பின்னர் சுவாமிகளுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், தேன் உள்ளிட்ட 16 வகையான சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம், தச தரிசனம், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கீரனூர், முதுகுளத்தூர், கமுதி, அபிராமம் உள்ளிட்ட சுற்றுவட்டார பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News