ஆன்மிகம்
பெருமாள் பூஜை

பெருமாள் கோவில்களில் இன்று சிறப்பு வழிபாடு: பக்தர்களுக்கு அனுமதியில்லை

Published On 2021-09-18 06:57 GMT   |   Update On 2021-09-18 06:57 GMT
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடக்கிறது. ஆனால் பக்தர்களுக்கு அனுமதியில்லை.
பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையன்று சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.

முதல் சனிக்கிழமையான இன்று குமரி மாவட்டத்தில் உள்ள திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில், நாகர்கோவில் இடர்தீர்த்த பெருமாள் கோவில் உள்பட ஏராளமான பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழக கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை. இதனால் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தாலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. அவர்கள் கோவில் வாசலில் நின்று மட்டும் சாமி தரிசனம் செய்து விட்டு செல்ல முடியும்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் நேற்று அடைக்கப்பட்டிருந்ததால், பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவில் அடைக்கப்பட்டு இருந்தாலும், கோவில் கிழக்கு நடை அருகில் உள்ள, மாத்தூர் மடத்துக்கு சொந்தமான நரசிம்மர் கோவிலில் பக்தர்கள் வழிபட்டு சென்றனர்.
Tags:    

Similar News