ஆன்மிகம்
நாராயண சுவாமி

உடன்குடி-முத்துகிருஷ்ணாபுரம் நாராயண சுவாமி நிழல் தாங்கலில் ஆவணி திருவிழா

Published On 2021-09-17 07:38 GMT   |   Update On 2021-09-17 07:38 GMT
உடன்குடி முத்துக் கிருஷ்ணாபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் நடந்த ஆவணி திருவிழா தவனபால் தர்மம், வரி இனிமம் வழங்கலுடன் நிறைவு பெற்றது.
உடன்குடி முத்துக் கிருஷ்ணாபுரம் நாராயணசுவாமி நிழல் தாங்கலில் ஆவணி திருவிழா 5 நாள் நடந்தது. முதல் நாள் காலை பணிவிடை, உகப் படிப்பு, கோபுரத்திற்கு மாலையிடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது.தொடர்ந்து விழா நாட்களில் அகண்ட உகப்படிப்பு, உம்பான் தர்மம் வழங்கல்,

அன்னதர்மம் வழங்கல், சந்தனக்குடம் எடுத்தல், உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. மேலும் தினமும் அய்யா கருடர், குதிரை, நாகம், தொட்டில் போன்ற பல்வேறு வாகனங்களில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 4-ம் நாள்இரவு சிறப்பு நிகழ்ச்சியாக அய்யா பூஞ்சப்பரத்தில் பவனி வந்தார்.

வீடுகள் தோறும் தேங்காய் பழம் வைத்து வழிபாடு செய்தனர். 5-ம் நாள் பள்ளி உணர்தல், உகப்படிப்பு, தவனபால் தர்மம், வரி இனிமம் வழங்கலுடன் 5 நாள் ஆவணி திருவிழா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை விழாக் குழுவினர் மற்றும் ஊர்மக்கள் செய்து இருந்தனர்.

Tags:    

Similar News