ஆன்மிகம்
பெருமாள்

சாப்டூர் வனப்பகுதியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை

Published On 2021-09-16 08:15 GMT   |   Update On 2021-09-16 08:15 GMT
சாப்டூர் வனப்பகுதியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை அதிகாரி தெரிவித்து உள்ளார்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சாப்டூர் வனப்பகுதியில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை ரேஞ்சர் செல்லமணி கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது:- சாப்டூர் வனப்பகுதியில் உள்ள மாவூத்து மலைக்குமேல் பெருமாள்கோவில் உள்ளது. இந்தக் கோவில் தரையில் இருந்து சுமார் 3000 அடி உயரத்தில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி சனிக்கிழமை மற்றும் பிற நாட்களிலும் சாமி கும்பிட பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மேலும் தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு தலின் படி, இந்த கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி இல்லை. தற்போது வனப்பகுதியில் மழை பெய்துள்ளதால் சிறுத்தை, காட்டு மாடு, கரடி, செந்நாய் கூட்டம், உள்பட வன விலங்கு களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

ஆகையால் விலங்குகளின் நடமாட்டம் உள்ளதால் சாப்டூர் வனப் பகுதிக்குள் உள்ள பெருமாள் கோவிலுக்கு பக்தர்கள் சாமி கும்பிட செல்வதற்கு அனுமதி இல்லை. மீறி பக்தர்கள் யாரும் சென்றால் வனத்துறை சட்டப்படி அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News