ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவில் திருவிழா

Published On 2021-09-11 07:56 GMT   |   Update On 2021-09-11 07:56 GMT
அம்பத்தூர் ஒரகடம் அய்யா வைகுண்ட திருப்பதி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த திருவிழா 10 நாட்கள் நடக்கிறது.
அம்பத்தூர் ஒரகடத்தில் உள்ள அய்யா வைகுண்ட திருப்பதி கோவிலில் திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விழா நடக்கும் 10 நாட்களும் காலையில் 6 மணிக்கு உகப்படிப்பு, மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்புடன் பணிவிடை, மாலை 5.15 மணிக்கு அகிலத்திரட்டு அம்மானை திருஏடு வாசிப்பு மற்றும் அதன் விளக்க உரை, இரவு 8 மணிக்கு வாகன பவனி வருதல், அதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

இறுதி நாளான 19-ந்தேதி நடக்கும் விழாவில், மாலை 5.30 மணிக்கு அய்யா இந்திர விமான வாகனத்தில் நகர்வலம் வருதல், இரவு 10 மணிக்கு பட்டாபிஷேக திருஏடு வாசிப்பு, அதிகாலை 3.30 மணிக்கு திருக்கொடி இறக்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
Tags:    

Similar News