ஆன்மிகம்
முளைப்பாரி

நயினார்கோவில் பகுதியில் முளைப்பாரி திருவிழா

Update: 2021-09-03 06:04 GMT
நயினார்கோவில் பகுதியில் முளைப்பாரி திருவிழா வருடந்தோறும் உழவு செய்து வயல்களை தயார் செய்து நெல் விதைப்பு பணிக்கு முன்பு பாரி வளர்த்து முளைப்பாரி திருவிழா கொண்டாடுவது வழக்கம்.
பரமக்குடி தாலுகா நயினார்கோவில் யூனியன் அ.கச்சான் கிராமத்தில் மழை வேண்டி பாரி வளர்த்து முளைப்பாரி திருவிழா கொண்டாடினர். நயினார்கோவில் பகுதியில் முளைப்பாரி திருவிழா வருடந்தோறும் உழவு செய்து வயல்களை தயார் செய்து நெல் விதைப்பு பணிக்கு முன்பு பாரி வளர்த்து முளைப்பாரி திருவிழா கொண்டாடுவது வழக்கம்.

அதேபோல் இந்த வருடமும் வெகுசிறப்பாக பாரி வளர்த்து கிராமங்கள் முக்கிய பகுதிகளில் பெண்கள் உலா வந்து அம்மனை வழிபட்டு ஆண்கள் ஒயிலாட்டம், பெண்கள் தானானே கொட்டுதல் என்று உற்சாகமாக கொண்டாடி அருகில் உள்ள குளத்தில் பாரியை கரைத்தனர். இதனைத் தொடர்ந்து இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
Tags:    

Similar News