ஆன்மிகம்
சிறப்பு அலங்காரத்தில் கண்ணபிரான்

திருக்கோஷ்டியூரில் சவுமியநாராயண பெருமாள் திருக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Published On 2021-09-01 04:42 GMT   |   Update On 2021-09-01 04:42 GMT
இரவு 12 மணி அளவில் ஆதிஷேஷன் கிருஷ்ணருக்கு குடைபிடிக்க, சந்தான கோபால கிருஷ்ணன் ஏகாதசி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.
சிவகங்கை சமஸ்தானத்திற்கு உட்பட்ட, தேவஸ்தான கோவில்களில் ஒன்றானதும் 108 திவ்ய ஸ்தலங்களில் சிறப்பானதும், ராமானுஜர் ஓம் நமோ நாராயண என்று உபதேசம் செய்த இடமாகவும் விளங்கும் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயண பெருமாள் கோவிலில் 2-வது ஆண்டு கிருஷ்ண ஜெயந்திவிழா கொண்டாடப்பட்டது.

பின்னர் கண்ணன் பிறப்பை கொண்டாடும் வகையில் பெண்களின் கோலாட்டம் நடந்தது. தொடர்ந்து இரவு 12 மணி அளவில் ஆதிஷேஷன் கிருஷ்ணருக்கு குடைபிடிக்க, சந்தான கோபால கிருஷ்ணன் ஏகாதசி மண்டபத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளல் நடைபெற்றது.

தொடர்ந்து கோபால கிருஷ்ணனுக்கு பாலூட்டும் வைபவமும், தொட்டில் ஆட்டும் நிகழ்ச்சியும், நடந்தன.

நிகழ்ச்சியைக்காண சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். இரவு 2 மணி வரையிலும் அன்னதானம் மற்றும் நந்த கோபால ராமனுஜ நந்தவன பராமரிப்பு நாலுவட்டகை யாதவா சங்கம் சார்பில் பிரசாதம் மற்றும் கடந்த ஆண்டு அரசு பொது தேர்வில் பாடங்கள் வாரியாக அதிக மதிப்பெண் பெற்ற குழந்தைகளுக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. தொடர்ந்து உறியடி விழா மற்றும் சாமி தென்னமர வீதி புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

விழா ஏற்பாடுகளையும் பரம்பரை அறங்காவலர் டி.எஸ்.கே. மதுராந்தகநாச்சியார், மேலாளர் இளங்கோ, கண்காணிப் பாளர் சேவற்கோடியான் மற்றும் நாலுவட்டகை யாதவா சங்கம், கிருஷ்ணஜெயந்தி விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

இதேபோல் திருப்பத்தூர்நின்ற நாராயண பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இங்கு ஏராளமான குழந்தைகள் கண்ணன்- ராதை வேடமணிந்து கலந்துகொண்டனர்.
Tags:    

Similar News