ஆன்மிகம்
வெள்ளிமலை கண்டன் சாஸ்தா கோவில்

வெள்ளிமலை கண்டன் சாஸ்தா கோவிலில் மீண்டும் பூஜை தொடங்கியது

Published On 2021-07-26 07:33 GMT   |   Update On 2021-07-26 07:33 GMT
வெள்ளிமலை காட்டாளம்மன் கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் தமிழக அரசுக்கு ஆன்லைன் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
குமரி மாவட்ட இந்து அறநிலையத்துறைக்குட்பட்ட வெள்ளிமலை காட்டாளம்மன் கோவில் என்ற காட்டாலை கண்டன் சாஸ்தா கோவில் 2 ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. இங்கு திருக்கோவில் நிர்வாகம் சார்பில் சுமார் 47 ஆண்டுகளுக்கு முன்பு வரை தினசரி பூஜைகள் நடத்தப்பட்டது. அதன்பின்பு சரியாக பூஜைகள் நடத்தப்படாமல் வந்ததாக தெரிகிறது.

இங்கு தினசரி பூஜைகள் நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் சார்பில் தமிழக அரசுக்கு ஆன்லைன் மூலம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனு தொடர்பாக விசாரணை நடத்தி, கோவிலில் மீண்டும் தினசரி பூஜைகள் நடத்த அரசு உத்தரவிட்டது.

இதனைதொடர்ந்து மாவட்ட திருக்கோவில் இணை ஆணையர் செல்வராஜன் உத்தரவின்படி பத்மநாபபுரம் தேவசம் போர்டு கண்காணிப்பாளர் சிவகுமார் மற்றும் கோவில் ஸ்ரீ காரியக்கார் சுதர்ஷனகுமார் ஆகியோர் கண்டன் சாஸ்தா கோவிலுக்கு சென்று, அதன் நிர்வாக தலைவர் அய்யப்பன்பிள்ளையிடம் பேசினர். அதனடிப்படையில், தற்போது மீண்டும் கோவிலில் தினசரி பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிகாரிகளுக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
Tags:    

Similar News