ஆன்மிகம்
அகரம் பள்ளிபட்டு ஸ்ரீஅம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

அகரம் பள்ளிபட்டு ஸ்ரீஅம்மன் கோவிலில் சிறப்பு பூஜை

Published On 2021-07-21 06:32 GMT   |   Update On 2021-07-21 06:32 GMT
அகரம் பள்ளிபட்டு ஸ்ரீஅம்மன் கோவிலில் ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.
வாணாபுரம் அருகே உள்ள அகரம்பள்ளிபட்டு கிராமத்தில் புகழ் பெற்ற ஸ்ரீஅம்மன் கோவில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

கடந்த ஆண்டு கொரோனா வைரசின் தாக்கம் காரணமாக கோவிலில் திருவிழா நடத்த தடை செய்யப்பட்டது. இந்த நிலையில் நேற்று ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு ஸ்ரீஅம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு அலங்காரங்கள் செய்யப்பட்டது.

இதில் திருவண்ணாமலை மற்றும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து கோவில் வளாகத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News