ஆன்மிகம்
முன்னோர்களுக்கு தர்ப்பணம்

ஆனி அமாவாசையையொட்டி சேலத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

Published On 2021-07-10 02:37 GMT   |   Update On 2021-07-10 02:37 GMT
ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில் உள்பட சில கோவில்கள் அருகில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.
அமாவாசை தினத்தன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது ஐதீகம் ஆகும். அதன்படி ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று சேலத்தில் உள்ள சுகவனேஸ்வரர் கோவில் உள்பட சில கோவில்கள் அருகில் முன்னோர்களுக்கு பொதுமக்கள் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம்.

நேற்று ஆனி அமாவாசையையொட்டி சேலம் சுகவனேஸ்வரர் கோவில் அருகே ஏராளமானவர்கள் இறந்த தங்களின் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். வாழை இலையில் பூக்கள், தேங்காய், பழம், மற்றும் முன்னோர்களுக்கு பிடித்த தின்பண்டங்கள் உள்ளிட்டவற்றை வைத்து தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

Tags:    

Similar News