ஆன்மிகம்
சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா

சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழா

Published On 2021-06-03 07:04 GMT   |   Update On 2021-06-03 07:04 GMT
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக விழாக்கள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் கெங்கையம்மன் கோவிலில் சிரசு ஏற்றம் நடந்தது.
வேலூர் சத்துவாச்சாரியில் பழைமை வாய்ந்த கெங்கையம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் சிரசு திருவிழாவுக்கு வேலூர் நகரத்தில் இருந்து மட்டுமல்லாமல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். மக்கள் கூட்டத்தால் சத்துவாச்சாரி நகரமே மூழ்கி இருக்கும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக விழாக்கள் நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. எனினும் நேற்று அதிகாலையில் கெங்கையம்மன் கோவிலில் சிரசு ஏற்றம் நடந்தது.

இதில் குறைந்த அளவிலான நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி முடிந்ததும் கோவிலின் முன்பக்க கதவு மூடப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பொதுமக்கள் வெளியே நின்று தரிசனம் செய்துவிட்டு சென்றனர். விழாவையொட்டி சத்துவாச்சாரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
Tags:    

Similar News