ஆன்மிகம்
திரவுபதியம்மன் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க தன்வந்திரி யாக பூஜை

திரவுபதியம்மன் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்க தன்வந்திரி யாக பூஜை

Published On 2021-05-27 05:42 GMT   |   Update On 2021-05-27 05:42 GMT
மதுரை தெற்குமாரட் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் பவுர்ணமி நாளில் சிறப்பு தன் வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இந்த சிறப்பு யாகத்தில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
மதுரை தெற்குமாரட் வீதியில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் பவுர்ணமி நாளில் கொரோனா வைரஸ் அழியவும், உலக மக்கள் அந்த நோயிலிருந்து விடுபட்டு நல்ல உடல்நலத்தோடு வாழ வேண்டியும் சிறப்பு தன் வந்திரி யாகம் நடத்தப்பட்டது. இதையொட்டி அங்கு யாகசாலை அமைத்து வேத மந்திரங்கள் முழங்க அக்னி வளர்க்கப்பட்டது. அப்போது கொரோனா வைரஸ் போன்ற உருவ பொம்மையை ஹோமகுண்டத்தில் போட்டு அர்ச்சகர் மந்திரங்களை கூறினார்.

மேலும் பூஜையில் புனித நீர் நிரம்பிய கும்பத்திற்கு சிறப்பு யாக பூஜையும் நடந்தது. பின்னர் அந்த புனித நீரால் திரவுபதியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகளும், அர்ச்சனைகளும் செய்யப்பட்டது. பொதுமக்கள் நன்மைக்காக செய்யப்பட்ட இந்த சிறப்பு யாகத்தில் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.
Tags:    

Similar News