ஆன்மிகம்
என்.தட்டக்கல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

என்.தட்டக்கல் கிராமத்தில் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-04-30 05:51 GMT   |   Update On 2021-04-30 05:51 GMT
போச்சம்பள்ளி தாலுகா என்.தட்டக்கல் கிராமத்தில், சக்தி மாரியம்மன், ஊர் மாரியம்மன், கக்கு மாரியம்மன் மற்றும் கங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நடந்தது.
போச்சம்பள்ளி தாலுகா என்.தட்டக்கல் கிராமத்தில், சக்தி மாரியம்மன், ஊர் மாரியம்மன், கக்கு மாரியம்மன் மற்றும் கங்கை அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி கணபதி பூஜை, கணபதி ஹோமம், மகாலட்சுமி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், கொடி ஏற்றுதல், கங்கனம் கட்டுதல், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து தீர்த்தக்குடம், நவதானிய முளைப்பாரியுடன் புதிய சிலைகள், கோபுர கலசம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து புதிய சிலைகள் சயனாதிவசம் செய்தல், யாகசாலை பிரவேசம், முதல்கால யாக பூஜை, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடந்தது.

நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு 2-கால யாக பூஜை, கோபுரத்தில் கலசம் வைத்தல், 3-ம் கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 4-ம் கால யாக பூஜை, மூலவர், மாரியம்மன், ஊர்மாரியம்மன், கக்குமாரியம்மன், கங்கை அம்மன் ஆகிய சாமிகள் மற்றும் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை, மகா அபிஷேகம் நடந்தது. இதில் சாமி சிறப்பு அலங்காரத்துடன் அருள் பாலித்தார். இதற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் ஊர்கவுண்டர் செய்திருந்தார்.
Tags:    

Similar News