ஆன்மிகம்
ஏழுமலையான் தங்க கருட வாகனத்தில் மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

திருப்பதியில் கருட வாகனத்தில் மாடவீதியில் உலா வந்த ஏழுமலையான்

Published On 2021-04-28 09:41 GMT   |   Update On 2021-04-28 09:41 GMT
ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தளர்வுடன் ஊரடங்கு அமுலில் உள்ளதால் குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே தங்க கருட வாகனத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
பவுர்ணமிதோறும் திருப்பதியில் மாடவீதிகளில் கருட வாகனத்தில் ஏழுமலையான் வீதிஉலா நடக்கும்.

சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு நேற்று இரவு தங்க கருட வாகனத்தில் ஏழுமலையான் எழுந்தருளினார்.

இரவு 7 மணிக்கு கோவில் எதிரே உள்ள வாகன மண்டபத்தில் இருந்து மலையப்ப சுவாமி தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி 4 மாடவீதிகளில் வீதிஉலா வந்து அருள்பாலித்தார். இதில் ஜீயர்கள் மற்றும் அர்ச்சகர்கள் தேவஸ்தான அதிகாரிகள் பங்கேற்றனர்.

கொரோனா 2-ம் அலை பரவல் காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தளர்வுடன் ஊரடங்கு அமுலில் உள்ளதால் குறைந்த அளவில் பக்தர்கள் மட்டுமே தங்க கருட வாகனத்தில் பங்கேற்று தரிசனம் செய்தனர்.

திருப்பதியில் நேற்று 11,490 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.1.30 கோடி உண்டியல் வசூலாகியுள்ளது.
Tags:    

Similar News