ஆன்மிகம்
கோவில் மண்டபத்தில் கள்ளழகர் அலங்காரத்தில் காட்சியளித்த ஜெனக நாராயண பெருமாள்

கோவில் மண்டபத்தில் கள்ளழகர் அலங்காரத்தில் காட்சியளித்த ஜெனக நாராயண பெருமாள்

Published On 2021-04-28 06:49 GMT   |   Update On 2021-04-28 06:49 GMT
ஜெனகநாராயண பெருமாள் கோவில் மண்டபத்தில் வெண்குதிரை வாகனத்தில் ஜெனகநாராயண பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.
சோழவந்தானில் உள்ள பிரசித்தி பெற்ற ஜெனகநாராயணப் பெருமாள் கள்ளழகர் வேடம் பூண்டு வைகையாற்றில் இறங்கும் வைபவம் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று விமரிசையாக நடைபெறும்.

இதைத்தொடர்ந்து மதுரையில் நடப்பதுபோல் தசாவதாரம், பூப்பல்லக்கு போன்ற திருவிழா 3 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இதனால் நகரம் முழுவதுமே விழாக்கோலம் பூண்டிருக்கும். இந்தநிலையில் கொரோனா பாதிப்பின் காரணமாக சித்திரை திருவிழா தடை செய்யப்பட்டுள்ளது. நேற்று காலை ஜெனகநாராயண பெருமாள் கோவில் மண்டபத்தில் வெண்குதிரை வாகனத்தில் ஜெனகநாராயண பெருமாள் கள்ளழகர் அலங்காரத்தில் காட்சியளித்தார்.

செயல் அலுவலர் சத்தியநாராயணன் முன்னிலையில் ரகுராமர் பட்டர் பூஜை செய்தார். தங்களின் குழந்தைகளுக்கு ஆற்றின் கரையோரமாக மொட்டையடித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Tags:    

Similar News