ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோவிலில் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

Published On 2021-04-10 06:40 GMT   |   Update On 2021-04-10 06:40 GMT
இன்று முதல் கொரோனா 2-வது அலை பரவுவதை தடுக்க திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் 2 நாட்களுக்கு முன்பாக நேற்று இரவே பூக்குழி இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பூக்குழி திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டதால் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவில்லை. 7 நாட்கள் திருவிழா நடந்த நிலையில் பூக்குழி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டதால் பக்தர்கள் வேதனை அடைந் தனர்.

இந்த ஆண்டும் கோவில் திருவிழா தொடங்கி நடை பெற்று வருகிறது. நாளை (11-ந்தேதி) பக்தர்கள் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக இருந்தது. இதற்காக பக்தர்கள் விரதம் இருந்து வந்தனர். ஆனால் இன்று முதல் கொரோனா 2-வது அலை பரவுவதை தடுக்க திருவிழா நடத்த தடை விதிக்கப்பட்டது. இதனால் 2 நாட்களுக்கு முன்பாக நேற்று இரவே பூக்குழி இறங்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து ஏராளமான பக்தர்கள் நேற்று இரவு முதல் இன்று அதிகாலை வரை பூக்குழி இறங்கி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.

கடந்த ஆண்டு விழா ரத்து செய்யப்பட்டதால் வேதனை அடைந்த பக்தர்கள் இந்த ஆண்டு தடை விதிக்கப் பட்டிருந்த போதிலும் முன்னதாக தங்கள் நேர்த்தக்கடனை செலுத்தியது மகிழ்ச்சி அளித்துள்ளது என்றனர்.
Tags:    

Similar News