ஆன்மிகம்
குழந்தையை கையில் தூக்கிக்கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பெண்ணை படத்தில் காணலாம்.

ஏரியூர் அருகே சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா

Published On 2021-04-09 08:04 GMT   |   Update On 2021-04-09 08:04 GMT
ஏரியூர் அருகே சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. இதில் பெண்கள் குழந்தைகளை கையில் வைத்துக்கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள ராமகொண்டஅள்ளியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீசமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. ராமகொண்டஅள்ளி, காணிக்காடு, சந்தன கொடிக்கால், புதுநாகமரை, சிங்கிலிமேடு உள்ளிட்ட 7 ஊர்களுக்கு சொந்தமான இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை திருவிழா நடைபெறும்.

இதேபோல் இந்த ஆண்டும் கோவிலில் கடந்த 3 நாட்களாக திருவிழா நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாள் நிகழ்ச்சியான நேற்று தீ மிதி விழா நடைபெற்றது.

இதில் பெண்கள், குழந்தைகள் உள்பட 200-க்கும் மேற்பட்டவர்கள் தீ மிதித்து தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்களது குழந்தைகளுடன் தீ மிதித்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. திருவிழாவில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவிழாவையொட்டி கடந்த 3 நாட்களாக அன்னதானம் நடைபெற்று வருகிறது.
Tags:    

Similar News