ஆன்மிகம்
நாகூரில் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி விழா

நாகூரில் திரவுபதியம்மன் கோவிலில் தீ மிதி விழா

Published On 2021-04-08 07:19 GMT   |   Update On 2021-04-08 07:19 GMT
நாகையை அடுத்த நாகூரில் திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
நாகையை அடுத்த நாகூரில் திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தீ மிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆண்டு திருவிழா கடந்த 26-ந்தேதி திருவிளக்கு பூஜையுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து 29-ந்தேதி கொடியேற்றம் நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு அபிஷேக ஆராதனையும், சந்தனகாப்பு அலங்காரமும் நடைபெற்றது.

விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக தீமிதி விழா நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தீக்குண்டத்தில் இறங்கி தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினர்.
Tags:    

Similar News