ஆன்மிகம்
திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம்

திருவெள்ளறை பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2021-04-07 06:27 GMT   |   Update On 2021-04-07 06:27 GMT
திருவெள்ளறை புண்டரீகாச பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
மண்ணச்சநல்லூர் அருகே உள்ள திருவெள்ளறை புண்டரீகாச பெருமாள் கோவில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவில் ஆகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

அதன்படி இந்தஆண்டு திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை 3.30 மணி அளவில் பெருமாள் தாயாருடன் தேரில் எழுந்தருளினார். அதைத்தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வாணவேடிக்கைகளுடன் பக்தர்கள் அதிகாலை 5.10 மணிக்கு தேரை வடம்பிடித்து இழுத்தனர்.

தேர், தேரோடும் வீதிவழியாக வலம் வந்து 7.20 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். தேரோட்டத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளின் சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News