ஆன்மிகம்
கமுதி முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில், பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசி நேர்த்தி கடனை செலுத்தினர்.

முத்துமாரியம்மன் கோவில் திருவிழா: உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன்

Published On 2021-04-01 06:54 GMT   |   Update On 2021-04-01 06:54 GMT
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி முத்துமாரியம்மன் கோவில் பொங்கல் திருவிழாவில் உடலில் சேறு பூசி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் முத்துமாரியம்மன் கோவில் பழமை வாய்ந்த கோவிலாகும். இந்த கோவிலில் கடந்த 19-ந்ேததி கொடியேற்றத்துடன் பங்குனி திருவிழா தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். நேற்று முன்தினம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கோவில் முன்பு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். நேற்று அக்னிச் சட்டி திருவிழா நடைபெற்றது.

இதில் ஏராளமான பக்தர்கள் அக்னிசட்டி, பால்குடம், பூப்பெட்டி, கரும்பாலை தொட்டில் போன்ற நேர்த்திக்கடன்கள் செலுத்தினர். சுற்று வட்டாரத்தில் உள்ள ஏராளமான கிராமங்களில் இருந்து ஆயிரக் கணக்கானோர் திருவிழாவை காணவந்ததால் கமுதி நகர் முழுவதும் திருவிழா கலைகட்டியது.

மேலும் ஏராளமான பக்தர்கள் உடல் முழுவதும் சேறு பூசிக் கொண்டு கோவிலைச் சுற்றி வலம் வந்தனர். இந்த நேர்த்திக்கடனை சிறுவர்கள் பெண்கள், முதியவர்கள் உள்பட ஏராளமானோர் செய்தனர். இவ்வாறு பூசுவதால் உடலில் உள்ள நோய்கள் தீரும் என்பது இவர்களது நம்பிக்கை. திருவிழாவில் சென்னை, காரைக்குடி, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமானோர் வந்து கலந்து கொண்டனர்.

விழா அனைத்து ஏற்பாடுகளையும் சத்திரிய நாடார் உறவின் முறை செய்திருந்தது.
Tags:    

Similar News