ஆன்மிகம்
திரவுபதி அம்மன்

பக்கிரிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் நாளை கொடிமரம் பிரதிஷ்டை

Published On 2021-03-23 07:08 GMT   |   Update On 2021-03-23 07:08 GMT
விழுப்புரம் விக்கிரவாண்டி தாலுகா பக்கிரிப்பாளையத்தில் உள்ள கிருஷ்ணன், பஞ்சபாண்டவ சமேத திரவுபதி அம்மன் கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது.
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுகா பக்கிரிப்பாளையத்தில் கிருஷ்ணன், பஞ்சபாண்டவ சமேத திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கொடிமரம் பிரதிஷ்டை விழா நாளை (புதன்கிழமை) நடக்கிறது. இதையொட்டி நேற்று மாலை 4 மணிக்கு புண்யாவாகனம், அக்னி பிரதிஷ்டை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி உள்பட பல்வேறு பூஜைகள் நடந்தது.தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மற்றும் மாலையில் அக்னி பாராயணம், உத்த ஹோமம், பூர்ணாகுதி, மூர்த்தி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது.

விழாவில் நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு விஸ்வரூபம், திருப்பள்ளி எழுச்சி, அக்னி பிரணயம், பூர்ணாகுதி ஆகிய நிகழ்ச்சியை அடுத்து காலை 9 மணிக்கு யாத்ராதானம், 10 மணிக்கு பிரதிஷ்டை, அக்‌ஷதை ஆசீர்வாதம், அனுக்ரகம், சாற்றுமுறை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கோவில் பிரகாரத்தில் 26 அடி உயர கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. விழாவில் இரவு 10 மணிக்கு சாமி வீதிஉலா நடக்கிறது. பூஜைகள் ஸ்ரீவத்ஸபட்டர் தலைமையில் நடக்கிறது.

இதற்கான ஏற்பாடுகளை பக்கிரிப்பாளையம் வேங்கடபதி குடும்பத்தினர் மற்றும் கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News