ஆன்மிகம்
எருமப்பட்டி அக்னி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

எருமப்பட்டி அக்னி மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா

Published On 2021-03-23 05:37 GMT   |   Update On 2021-03-23 05:37 GMT
எருமப்பட்டி அய்யர்மேடு அருகே உள்ள அக்னி மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
எருமப்பட்டி அய்யர்மேடு அருகே உள்ளது அக்னி மாரியம்மன் கோவில். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தீமிதி விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் காப்பு கட்டி விழா தொடங்கியது. நேற்று காலை மாவிளக்கு பூஜை நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது இந்த தீமிதி விழாவை காண எருமப்பட்டி, கோடங்கிபட்டி, காவல்காரன்பட்டி பொன்னேரி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை அறநிலையதுறையினர், விழாக்குழுவினர் மற்றும் அக்னி ராஜேஷ், கலைச்செல்வன் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News