ஆன்மிகம்
பூம்புகார் அருகே ராஜகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு

பூம்புகார் அருகே ராஜகாளி அம்மன் கோவில் குடமுழுக்கு

Published On 2021-03-06 06:03 GMT   |   Update On 2021-03-06 06:03 GMT
பூம்புகார் மேலையூர் ராசாங்குளம் கிராமத்தில் உள்ள ராஜகாளியம்மன் கோவிலில் வேத மந்திரங்கள் முழங்கிட கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. பின்னர் ராஜ காளியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது.
பூம்புகார் அருகே உள்ள மேலையூர் ராசாங்குளம் கிராமத்தில் ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற ஆகம விதிகளின்படி, கிராம பொதுமக்கள் மற்றும் பொறுப்பாளர்கள் இணைந்து கோவிலுக்கு திருப்பணி மேற்கொண்டனர்.

இதனைதொடர்ந்து நேற்று முன்தினம் முதல்கால யாக பூஜையுடன் விழா தொடங்கியது. மகாபூர்ணாகுதி தீபாராதனை நடந்தது. குடமுழுக்கு நாளான நேற்று 2-ம் கால யாக பூஜை நடந்தது. பின்னர் காத்திருப்பு சிவ ஆகம ரத்தினா சந்திரசேகர சிவாச்சாரியார் தலைமையில் புனித நீர் அடங்கிய குடங்கள் விமான கோபுரத்திற்கு எடுத்து செல்லப்பட்டது. இதனைத் தொடர்ந்து விமான கோபுரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

பின்னர் வேத மந்திரங்கள் முழங்கிட கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடந்தது. பின்னர் ராஜ காளியம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News