ஆன்மிகம்
சண்டி யாகம்

மரத்தடி மாரியம்மன் கோவிலில் மகா சண்டி யாகம் நாளை நடக்கிறது

Published On 2021-03-04 07:40 GMT   |   Update On 2021-03-04 07:40 GMT
கோவை கணபதியில் புகழ்பெற்ற மரத்தடி மாரியம்மன் கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா சண்டியாக பெருவிழா கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் தொடங்குகிறது.
கோவை கணபதியில் புகழ்பெற்ற மரத்தடி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாளை (வெள்ளிக்கிழமை) மகா சண்டியாக பெருவிழா கவுமார மடாலயம் சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள் தலைமையில் தொடங்குகிறது. அன்று அதிகாலை 4.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், கோபூஜை, மாலை 4 மணிக்கு வாஸ்து சாந்தி, பைரவர்-யோகினி பூஜைகள் நடக்கிறது. மேலும் மாலை 6 மணிக்கு 108 திருவிளக்கு பூஜை, 7 மணிக்கு கலச பூஜை, சண்டிகாதேவி ஆவாஹனம் நடைபெற உள்ளது.

நாளை மறுநாள் (சனிக்கிழமை) காலை 8.45 மணிக்கு திருவிளக்கு ஏற்றுதல், பூர்வாங்க பூஜை, 2-ம் கால யாகம், ஸ்ரீதுர்க்கா, லட்சுமி, சரஸ்வதி யாகங்கள், மாலை 5 மணிக்கு மங்கள இசை, பூர்வாங்க பூஜைகள், குமாரி கன்யா பூஜை, 3-ம் காலயாக பூஜை, 8 மணிக்கு ஒயிலாட்ட நிகழ்ச்சி நடக்கிறது. 7-ந் தேதி காலை 6 மணிக்கு சுப்ரபாதம், மங்கள இசை, பூர்வாங்க பூஜைகள், 4-ம் காலயாகம், 11 மணிக்கு சண்டிகா கலசாபிஷேகம்,மதியம் 12 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் மரத்தடி மாரியம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
Tags:    

Similar News