ஆன்மிகம்
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது எடுத்த படம்.

அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-26 08:42 GMT   |   Update On 2021-02-26 08:42 GMT
அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
கோவையை அடுத்த பெரிய தடாகத்தில் மிகவும் பழமையான அனுவாவி சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் ராமாயண காலத்தில் தொடர்புடைய தலமாக விளங்குகிறது. இந்த கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 23-ந்தேதி தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகளுடன் நடந்து வந்தது. இந்த நிலையில் நேற்று அதிகாலை காலை 5 மணிக்கு மங்கல இசையுடன் விநாயகர் வழிபாடு தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 8.15 மணிக்கு சிவாச்சாரியார்கள் தீர்த்தகுடங்களை ஏந்தியபடி கோவிலை சுற்றி வலம் வந்தனர். காலை 8.35 மணிக்கு அனைத்து பரிவார மூர்த்திகளின் கோபுரகலசங்களுக்கும் முருகப்பெருமான் விமான கோபுர கலசத்திற்கும் சிவாச்சாரியார்கள் தீர்த்த குடங்களில் இருந்து புனித நீர் ஊற்றினர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் முருகனுக்கு அரோகரா... கந்தனுக்கு அரோகரா என பக்தி முழக்கமிட்டனர்.

இதை தொடர்ந்து முருகன், வள்ளி தெய்வானை மற்றும் அனுமன், அருணாசலேஸ்வரர் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது.

பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி தெய்வானை யுடன் காட்சி அளித்தார். தொடர்ந்துகாலை 10 மணிக்கு அன்னதானம் நடைபெற்றது. மாலை திருக்கல்யாண விழா நடந்தது.

விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு திருமாங்கல்ய பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News