ஆன்மிகம்
வேலூரில் பேரி சிவசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்

வேலூரில் பேரி சிவசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்

Published On 2021-02-23 05:41 GMT   |   Update On 2021-02-23 05:41 GMT
வேலூர் பேரிபேட்டை பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
வேலூர் பேரிபேட்டை பி.எஸ்.எஸ். கோவில் தெருவில் உள்ள வள்ளி தேவசேனா உடனுறை பேரி சிவசுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு கடந்த 19-ந் தேதி விக்னேஸ்வர பூஜை, கோ பூஜை உள்ளிட்ட பூஜைகளும், 20-ந் தேதி சுதர்சன ஹோமம், நவக்கிரக ஹோமம் உள்ளிட்ட ஹோமங்களும், முதல் கால யால பூஜை நடந்தது. நேற்று முன்தினம் 2-ம் கால யாக பூஜை, தீபாராதனை மற்றும் 3-ம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து நேற்று 4-ம் கால யாக பூஜை, தசதானம், யாத்ரா தானம் ஆகியவை நடைபெற்றது.

அதைத் தொடர்ந்து 6 மணிக்கு மகா பூர்ணாஹூதி மற்றும் கலச புறப்பாடும், 6.30 மணிக்கு விமானம், ராஜகோபுரத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகமும், 7 மணிக்கு மூலவருக்கு மகா தீபாராதனையும், மாலை 4 மணி அளவில் மகா அபிஷேகம் அதைத்தொடர்ந்து திருக்கல்யாணம், சுவாமி திருவீதி உலாவும் நடந்தது.

விழாவில் வேலூர் எம்.எல்.ஏ. கார்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். கோவில் பரம்பரை அறங்காவலர்கள் வி.துரைசாமி, வி.டி.என்.மார்க்கபந்து, வி.சத்தியநாராயணன் ஆகியோர் தலைமை தாங்கினர். கோவில் குருக்கள் பாபு, உமாபதி, சந்திரசேகர் ஆகியோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

விழாவில் கணேஷ் பாத்திரக் கடை உரிமையளர்கள் எஸ்.ஆர்.எம். ராஜா, விஜயகுமார், மகேஷ், சீனிவாசன் மற்றும் கார்த்திக், பாலாஜி உள்பட வியாபார பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News