திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் அரசு பொது தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் வெற்றி பெற வேண்டி ஞானசரஸ்வதிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சிறப்பு யாக பூஜைகள் நடைபெற்றது. ஞானசரஸ்வதி தேவிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் அரசு பொதுத்தேர்வில் கலந்து கொள்ளும் மாணவ-மாணவிகள் தங்களது பெற்றோர்களுடன் வந்து கலந்துகொண்டு ஞானசரஸ்வதிக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர்.