ஆன்மிகம்
முத்தாலம்மன்

அகரம் முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேகம் நாளை நடக்கிறது

Published On 2021-02-23 04:52 GMT   |   Update On 2021-02-23 04:52 GMT
தாடிக்கொம்பு அருகே அகரத்தில் முத்தாலம்மன் கோவிலில், நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) கோ பூஜை, கணபதி ஹோமம் போன்றவை நடைபெற உள்ளது.
தாடிக்கொம்பு அருகே அகரத்தில் முத்தாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி இன்று (திங்கட்கிழமை) காலை 5 மணி அளவில் மங்கல இசையுடன் திருமுறை பாராயணம், கோ பூஜை, கணபதி ஹோமம் போன்றவை நடைபெற உள்ளது. பின்னர் மாலை முதல்கால யாக பூஜை, பூர்ணாகுதி போன்றவை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 2-ம் கால யாக பூஜையும், மதியம் 12 மணி அளவில் முத்தாலம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதலும் நடைபெறுகிறது. மாலையில் 3-ம் கால யாக பூஜை, தீபாராதனை போன்றவை நடைபெற உள்ளது. நாளை மறுநாள் அதிகாலை 5 மணி அளவில் 4-ம் கால யாக பூஜை நடைபெறுகிறது.

இதைத்தொடர்ந்து பிரம்மசுத்தி, நாடி சந்தனம் போன்ற பூஜைகள் நடத்தப்பட்டு, காலை 10 மணி அளவில் தீபாராதனை, 11.10 மணிக்கு அகரம் முத்தாலம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்க உள்ளது. கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை பரம்பரை நிர்வாக அறங்காவலர் மாரிமுத்து, தொழில் அதிபர்கள் மேகநாதன், பெரியசாமி செந்தில் முத்துக்குமார். லோகநாதன் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள் செய்து வருகின்றனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோவிலில் அன்னதானம் நடைபெற உள்ளது.
Tags:    

Similar News