ஆன்மிகம்
பத்ரகாளியம்மன் கோவில்

ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா தொடங்கியது

Published On 2021-02-18 09:30 GMT   |   Update On 2021-02-18 09:30 GMT
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.
ஈரோடு கள்ளுக்கடைமேடு பகுதியில் பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி தினமும் அம்மனுக்கு அபிஷேகம் நடைபெற்று சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். வருகிற 22-ந்தேதி இரவு 7 மணிக்கு கொடி ஏற்றப்படுகிறது. 28-ந்தேதி காலை 9 மணிக்கு பாலாபிஷேகம் நடக்கிறது. மார்ச் மாதம் 1-ந்தேதி இரவு 8 மணிக்கு அக்னி கபாலமும், 2-ந்தேதி மாலை 6 மணிக்கு குண்டம் பற்ற வைத்தலும் நடக்கிறது. 3-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். அன்று இரவு 9 மணிக்கு பத்ரகாளியம்மன் நூதன அலங்காரத்தில் திருவீதி உலா வருகிறார். 4-ந்தேதி மாலை 5 மணிக்கு மறுபூஜையுடன் விழா நிறைவடைகிறது.
Tags:    

Similar News