ஆன்மிகம்
அப்பா பைத்தியம் சாமிகள் கோவிலில் குருபூஜை விழா

அப்பா பைத்தியம் சாமிகள் கோவிலில் குருபூஜை விழா

Published On 2021-01-22 04:15 GMT   |   Update On 2021-01-22 04:15 GMT
புதுவை அப்பா பைத்தியம் சாமிகளுக்கு கோரிமேட்டில் கோவில் உள்ளது. இந்த கோவிலில் குருபூஜையையொட்டி திருவிளக்கு, புனிதநீர், வேள்வி வழிபாடு ஆகியவை நடந்தன.
புதுவை முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி தனது ஆன்மிக குருவான அப்பா பைத்தியம் சாமிகளுக்கு கோரிமேட்டில் கோவில் கட்டி உள்ளார். இந்த கோவிலில் குருபூஜை விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் திருவிளக்கு, புனிதநீர், வேள்வி வழிபாடு ஆகியவை நடந்தன. தொடர்ந்து அப்பா பைத்தியம் சாமிகளுக்கு மஞ்சனம் மற்றும் திருக்குட நன்னீராட்டு நடந்தது. நிகழ்ச்சியில் முன்னாள் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் கோபிகா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. வைத்தியநாதன், டாக்டர் நாராயணசாமி கேசவன் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News