ஆன்மிகம்
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா தொடங்கியது

மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா தொடங்கியது

Published On 2021-01-21 08:15 GMT   |   Update On 2021-01-21 08:15 GMT
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
மோகனூர் காந்தமலை பாலதண்டாயுதபாணி சாமி கோவிலில் வருகி்ற 28-ந் தேதி தைப்பூச தேர்த்திருவிழா நடைபெற உள்ளதை முன்னிட்டு கொடியேற்று விழா கிராமசாந்தியுடன் நடந்தது. தொடர்ந்து தினசரி இரவு சாமி ஆட்டுக்கிடா, மயில், யானை, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், கோவிலை சுற்றி மட்டுமே உலா வரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

28-ந் தேதி காலை 10.30 மணிக்கு சாமி திருத்தேர் ஏற்றம் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து இழுக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து சாமிக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News