ஆன்மிகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்க வாசல் திறப்பு

Published On 2020-12-26 06:07 GMT   |   Update On 2020-12-26 06:07 GMT
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஆண்டாள் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் மிகவும் பழமையானது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் உற்சவ திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறும்.

வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு சொர்க்கவாசல் வழியாக ஆழ்வார்கள் எதிர்கொண்டு வரவேற்க ஆண்டாள் ெரங்கமன்னார் எழுந்தருளும் நிகழ்வு சிறப்பாக நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு நேற்று காலை சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., கலெக்டர் கண்ணன், கூட்டுறவு நிலவள வங்கி தலைவர் முத்தையா, ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் ஆண்டாள், ரெங்கமன்னாரை தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன், கோவில் ஊழியர்கள் செய்து இருந்தனர்.

துணை போலீஸ் சூப்பிரண்டு நமசிவாயம் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News