ஆன்மிகம்
அகஸ்தீஸ்வரம் நாராயணசாமி கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி

அகஸ்தீஸ்வரம் நாராயணசாமி கோவிலுக்கு சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி

Published On 2020-12-05 03:45 GMT   |   Update On 2020-12-05 03:45 GMT
நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழாவுக்கு அய்யாவழி பக்தர்கள் மற்றும் பெண்கள், வைகுண்ட சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ மற்றும் இனிப்புகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
அகஸ்தீஸ்வரம் குலசேகர விநாயகர் அறநிலையத்துக்கு உட்பட்ட நாராயணசாமி கோவிலில் திருஏடு வாசிப்பு விழா கடந்த 20-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் 15-ம் நாளான நேற்று அய்யா வைகுண்டசாமிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. விழாவில் நேற்று மாலை 5 மணிக்கு அய்யாவழி பக்தர்கள் மற்றும் பெண்கள், வைகுண்ட சுவாமிக்கு வெற்றிலை, பாக்கு, பழம், பன்னீர், பூ மற்றும் இனிப்புகள் அடங்கிய சீர்வரிசை பொருட்களை வழங்கினர். 

முன்னதாக சீர்வரிசை பொருட்களை தட்டுகளில் ஏந்தியபடி குலசேகர விநாயகர் கோவிலில் இருந்து மேளதாளத்துடன் முத்துகுடைகள் முன்செல்ல ஊர்வலமாக எடுத்து வந்தனர். ஊர்வலத்திற்கு அறங்காவலர் கருணாகரன் தலைமை தாங்கினார். அறங்காவலர்கள் ராஜ சுந்தரபாண்டியன், ஸ்ரீனிவாசன், கோகுலகிருஷ்ணன், ராஜலிங்கம், ராஜசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊர்வலத்தை தொடர்ந்து அய்யாவுக்கு பணிவிடையும், மாலை 6 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பும், இரவு 8 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) பட்டாபிஷேக ஏடு வாசிப்பு நடக்கிறது.
Tags:    

Similar News