ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு இன்று தொடங்குகிறது

Published On 2020-12-04 07:09 GMT   |   Update On 2020-12-04 07:09 GMT
நாகர்கோவில் அருகே உடையப்பன்குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு இன்று தொடங்குகிறது.
நாகர்கோவில் அருகே உள்ள உடையப்பன் குடியிருப்பு நாராயணசாமி கோவிலில் கார்த்திகை திருஏடு வாசிப்பு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி வருகிற 20-ந் தேதி வரை 17 நாட்கள் நடக்கிறது. இன்று காலை 6 மணிக்கு பணிவிடை, மதியம் 12 மணிக்கு பணிவிடை, உச்சிப்படிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை மற்றும் திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு இனிமம் வழங்குதல் நடைபெறும்.

தொடர்ந்து வருகிற விழா நாட்களில் காலை 6 மணிக்கு பணிவிடையும், மதியம் 12 மணிக்கு பணிவிடை மற்றும் உச்சிபடிப்பு, மாலை 6 மணிக்கு பணிவிடை, திருஏடு வாசிப்பு, இரவு 9 மணிக்கு இனிமம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

வருகிற 18-ந் தேதி இரவு 7 மணிக்கு திருக்கல்யாண திருஏடுவாசிப்பும், இரவு 9 மணிக்கு அய்யாவின் வாகன பவனியும் நடைபெறும். திருவிழாவின் நிறைவு நாளான 20-ந் தேதி மாலை 4 மணிக்கு அய்யா வாகன பவனியும், இரவு 7 மணிக்கு திருஏடு வாசிப்பும், நள்ளிரவு 1 மணிக்கு திருஏடு வாசிப்பு நிறைவும் நடைபெறும். தொடர்ந்து இனிமம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறும்.

காற்றாடிதட்டை சேர்ந்த ராஜா, மேலஉடையப்பன்குடியிருப்பை சேர்ந்த பாலகிருஷ்ணன், உடையப்பன்குடியிருப்பை சேர்ந்த நாராயண மணி ஆகியோர் திருஏடு வாசிக்கிறார்கள். புதூரை சேர்ந்த அசோகன் அகிலத்திரட்டு மற்றும் பாராயணம் பேருரை ஆற்றுகிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊர் தலைவர் என்.பிச்சைப்பழம் தலைமையில் ஊர் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.
Tags:    

Similar News