நவகயிலாய தலங்களில், நடுநாயகமாக இருப்பதால் இதற்கு, ‘நடு கயிலாயம்’ என்றும் பெயர்உண்டு. நவ திருப்பதிகளுள், குருவுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது.
குருவுக்கு உரிய நடு கயிலாயம்
பதிவு: டிசம்பர் 03, 2020 10:32
குருவுக்கு உரிய நடு கயிலாயம்
திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் பாதையில் 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது முறப்பநாடு. இங்கு கயிலாசநாதர் கோவில் உள்ளது. இத்தல இறைவன் கயிலாசநாதர், வியாழ பகவானுக்குரிய அதிபதியாக அருள்பாலிக்கிறார். தன்னைத் தரிசித்த உரோமச முனிவருக்கு, சிவபெருமான் குருவின் அம்சமாக காட்சியளித்தார்.
எனவே இது குரு பரிகாரத் தலமாக கருதப்படுகிறது. இத்தல இறைவனுக்கு மஞ்சள் வஸ்திரம், கொண்டைக்கடலை மாலை அணிவித்து வழிபடும் வழக்கமும் இருக்கிறது. கோவில் அருகில் ஓடும் தாமிரபரணி நதி, வடக்கிலிருந்து தெற்கு நோக்கி பாய்கிறது. இதற்கு ‘தட்சிண கங்கை’ என்று பெயர்.
நவகயிலாய தலங்களில், நடுநாயகமாக இருப்பதால் இதற்கு, ‘நடு கயிலாயம்’ என்றும் பெயர்உண்டு. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக இருப்பது ஆழ்வார்திருநகரி திருத்தலம். இது நம்மாழ்வார் அவதரித்த தலமாகும். நவ திருப்பதிகளுள், குருவுக்கு உரிய தலமாகவும் இது விளங்குகிறது.
Related Tags :