ஆன்மிகம்
பட்டத்தரசி அம்மன்

சரவணம்பட்டியில் 4-ந் தேதி நடக்கிறது பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2020-12-02 06:04 GMT   |   Update On 2020-12-02 06:04 GMT
சரவணம்பட்டி பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சாக்தஸ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.
கோவையை அடுத்த சரவணம்பட்டியில் 100 ஆண்டு பழமை வாய்ந்த பட்டத்தரசி அம்மன் மற்றும் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 4-ந் தேதி சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், சாக்தஸ்ரீ வாராஹி மணிகண்ட சுவாமிகள் ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது. 3-ந் தேதி மாலை 4 மணிக்கு சிரவணமாபுரீஸ்வரர் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம், மாலை 6 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, விநாயகர் வழிபாடு, காப்பு அணிதல், 7 மணிக்கு 108 மூலிகைகளுடன் முதற்கால வேள்வி பூஜை, 9 மணிக்கு மூலமூர்த்திகளுக்கு மருந்து சாற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

4- ந் தேதி காலை 4 மணிக்கு மங்கல இசையுடன் திருப்பள்ளி எழுச்சி, மூர்த்திகளுக்கு காப்பு அணிதல், 5 மணிக்கு 108 மூலிகைகளுடன் 2- ம் கால வேள்வி பூஜை, காலை 6 மணிக்கு திருக்குட ஊர்வலம் ஆகியவை நடக்கிறது. காலை 6.15 மணிக்கு விமான கலசத்திற்கும் மற்றும் மூலமூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு திருமஞ்சனம், மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் மங்கள இசை, மகாதீபாராதனை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News