ஆன்மிகம்
சரவணம்பட்டி கோவிலில் சங்காபிஷேக விழா

சரவணம்பட்டி கோவிலில் சங்காபிஷேக விழா

Published On 2020-12-01 05:00 GMT   |   Update On 2020-12-01 05:00 GMT
கோவை சரவணம்பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை சிரவணமாபுரீஸ்வரர்கோவிலின் 17-ம் ஆண்டு சங்காபிஷேக வழிபாடு விழா நடைபெற்றது.
கோவை சரவணம்பட்டியில் உள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாமி அம்மன் உடனுறை சிரவணமாபுரீஸ்வரர்கோவிலின் 17-ம் ஆண்டு சங்காபிஷேக வழிபாடு விழா நேற்று நடைபெற்றது. 

திருவிளக்கு வழிபாடுகளுடன் 108 சங்குகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. மாலையில் மூலவருக்கு திருமஞ்சனம் சாற்றப்பட்டு 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. பூஜையின் போது சிவாச்சாரியர்கள் சிவ பாடல்களைப் பாடினர். 

அதனைத் தொடர்ந்து உற்சவமூர்த்திக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனையுடன் பூஜை நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News