ஆன்மிகம்
முத்தாரம்மன்

பெருவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா தொடங்கியது

Published On 2020-11-30 08:28 GMT   |   Update On 2020-11-30 08:28 GMT
நாகர்கோவில் பார்வதிபுரம், பெருவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா நேற்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கியது. இந்த விழா 2 நாட்கள் நடக்கிறது.
நாகர்கோவில் பார்வதிபுரம், பெருவிளை முத்தாரம்மன் கோவிலில் கார்த்திகை திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது. இன்று அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், 5.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், காலை 6 மணிக்கு உதயகால பூஜை, 10 மணிக்கு செல்வ விநாயகருக்கும், சாஸ்தாவுக்கும் சிறப்பு பூஜை, மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை ஆகியவை நடக்கிறது. மாலை 5 மணிக்கு கார்த்திகை தீபம் ஏற்றுதல், 6 மணிக்கு சந்தி மாடசாமிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8 மணிக்கு அம்பாள் வாகனத்தில் எழுந்தருளல், 8.30 மணிக்கு நையாண்டி மேளம், கரகாட்டம், குறவன் குறத்தி ஆட்டம், நள்ளிரவு 12 மணிக்கு ராஜமேளத்துடன் அம்பாள் வாகனத்தில் வீதி உலா வருதல் போன்றவை நடைபெறும்.

நாளை (திங்கட்கிழமை) காலை 6 மணிக்கு உதயகால பூஜை, மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை, 1 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறும். அன்னதானத்தை ஊர் தலைவர் ஜெயசந்திரன் தொடங்கி வைக்கிறார். மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடும், 7 மணிக்கு சாயங்கால பூஜையும், 7.30 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. நிகழ்ச்சியில் ஊர் செயலாளர் ராஜேஷ்வரன் வரவேற்று பேசுகிறார். முடிவில் பொருளாளர் ராஜேஷ் நன்றி கூறுகிறார்.
Tags:    

Similar News