ஆன்மிகம்
தூத்துக்குடியில் சந்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

தூத்துக்குடியில் சந்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2020-11-28 03:38 GMT   |   Update On 2020-11-28 03:38 GMT
தூத்துக்குடி சந்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன.
நெல்லை தெட்சணமாற நாடார் சங்கத்துக்கு பாத்தியப்பட்ட 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்திவிநாயகர் கோவில் பழுதடைந்து இருந்தது. இந்த கோவில் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடந்தது. விழா கணபதி ஹோமத்துடன் பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், மகாலட்சுமி ஹோமம், கோபூஜை, பூர்ணாகுதி மற்றும் முதல் கால யாகசாலை பூஜை நடந்தன.

பின்னர் இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. இதையடுத்து கோவில் விமான கலசத்துக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் விநாயகருக்கு பால், பன்னீர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடந்தன. கும்பாபிஷேகத்தை செந்தில்நாதன் சிவம் தலைமையிலான அர்ச்சகர்கள் நடத்தினர்.

விழாவில் தெட்சணமாறநாடார் சங்க தலைவர் ஆர்.கே.காளிதாசன் நாடார், செயலாளர் ஆர்.சண்முகவேல் நாடார், பொருளாளர் ஏ.செல்வராஜ் நாடார், சந்தி விநாயகர் கோவில் புனரமைப்பு குழு தலைவர் வி.எஸ்.கணேசன் நாடார், சங்க துணைத்தலைவர் முருகேசபாண்டியன், காரியகமிட்டி உறுப்பினர்கள் வி.தங்கவேலு, ராமர், சங்க இயக்குனர் எஸ்.அன்புலிங்கம், நிர்வாக சபை உறுப்பினர்கள் வி.ராதாகிருஷ்ணன், டி.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி தெய்வா நர்சிங் ஹோம் டாக்டர் கள் ராஜேசுவரி, சரவணன், தேவிரம்யா, தொழில் அதிபர் கட்டேரிராஜ், பால்சுயம்பு, டி.டி.எம்.என்.எஸ். கல்லூரி பேராசிரியர் பாலமுருகன், சிற்பி பெருமாள், முன்னாள் கவுன்சிலர் கோட்டுராஜா, தூத்துக்குடி தெட்சணமாற நாடார் சங்க டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் மாரியம்மாள் மற்றும் ஆசிரியைகள், சங்க உறுப்பினர்கள் திரளாக கலந்து கொண்டனர். அவைருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News