ஆன்மிகம்
சதுரகிரி

சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்களுக்கு அனுமதி

Published On 2020-11-26 06:16 GMT   |   Update On 2020-11-26 06:16 GMT
பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பேரையூர் அருகே சாப்டூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சதுரகிரியில் சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை ஆகிய நாட்களில் மட்டுமே செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த கோவிலுக்கு தாணிப்பாறையில் இருந்து மலைப்பாதை வழியாக சென்று பக்தர்கள் ஒவ்வொரு மாதமும் பிரதோஷம், பவுர்ணமி, அமாவாசை நாட்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் கார்த்திகை மாதம் பிரதோஷம், பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 30-ந் தேதி வரை 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பக்தர்கள் மலைப்பாதை வழியாக மட்டுமே கோவிலுக்கு சென்று வர வேண்டும் எனவும், நீரோடை பகுதிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது எனவும், இரவு நேரங்களில் பக்தர்கள் மலைப்பகுதியில் தங்குவதற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் அனுமதி நாட்களில் மழை பெய்தால் கோவிலுக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் எனவும், காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் நிர்வாகத்தினர் கூறினர்.

பக்தர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோவில் பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் விசுவநாத் ஆகியோர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News