ஆன்மிகம்
சோலைமலை முருகன் கோவில்

சோலைமலை முருகன் கோவிலில் 29-ந்தேதி கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது

Published On 2020-11-25 08:31 GMT   |   Update On 2020-11-25 08:31 GMT
சோலைமலை முருகன் கோவிலில் வருகிற 29-ந்தேதி கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படுகிறது. மேள தாளம் முழங்க சுவாமி புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.
மதுரை அழகர்கோவில் மலை உச்சியில் உள்ளது, முருகப்பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவில். இக்கோவிலில் திருக்கார்த்திகை தீப திருவிழா வருகிற 29-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அன்று காலையில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

அன்று மாலை 6 மணிக்கு கார்த்திகை மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து ராஜகோபுரம் முன்பாக சொக்கப்பனை கொளுத்தப்படுகிறது. மேள தாளம் முழங்க சுவாமி புறப்பாடு, அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும்.

30-ந்தேதி (திங்கட்கிழமை) 3-ம் சோமவார நிகழ்ச்சியாக காலை 11 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், கோவில் உள் பிரகாரத்தில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். இதனையடுத்து டிசம்பர் 7-ந் தேதி 4-ம் சோமவார நிகழ்ச்சியும், தொடர்ந்து 14-ந்தேதி 5-வது சோமவார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

பின்னர் சிறப்பு அபிஷேகமும், சுவாமி புறப்பாடும், மாலை 3 மணிக்கு அங்குள்ள சஷ்டி மண்டபத்தில் 1008 சங்காபிஷேகமும் நடைபெறும். இத்துடன் கார்த்திகை தீப திருவிழா நிறைவு பெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், கோவில் நிர்வாக அதிகாரி அனிதா, கண்காணிப்பாளர்கள், உள் துறை அலுவலர்கள், பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News