ஆன்மிகம்
தேரிவிளைகுண்டல் முருகனுக்கு ஆறாட்டு விழா

தேரிவிளைகுண்டல் முருகனுக்கு ஆறாட்டு விழா

Published On 2020-11-25 06:54 GMT   |   Update On 2020-11-25 06:54 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் முருகபெருமானுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டு ஆறாட்டு நடந்தது.
கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் கந்தசஷ்டிவிழா கடந்த 15-ந் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் கடந்த 20-ந்தேதி நடந்தது. 

தொடர்ந்து நேற்று ஆறாட்டு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக தேரிவிளைகுண்டல் முருகன் கோவிலில் இருந்து பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட குதிரை வாகனத்தில் எழுந்தருளிய முருகபெருமான் மகாதானபுரம் ரவுண்டானா சந்திப்பு பகவதியம்மாள்புரத்தில் உள்ள வெற்றிவேல் ஆறாட்டு தலத்திற்கு வந்தடைந்தார். 

பின்னர் ஆற்றில் முருகபெருமானுக்கு, அபிஷேகம் செய்யப்பட்டு ஆறாட்டு நடந்தது. அப்போது ஏராளமான பக்தர்கள் மலர்தூவி வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா என்று கோஷமிட்டனர். பின்னர் அன்னதானம் நடந்தது.
Tags:    

Similar News