ஆன்மிகம்
அய்யனார்

எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது

Published On 2020-11-24 08:40 GMT   |   Update On 2020-11-24 08:40 GMT
வெம்பக்கோட்டை அருகே உள்ள கீழராஜகுலராமன் எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் கும்பாபிஷேகம் 27-ந் தேதி நடக்கிறது.
விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை தாலுகாவை சேர்ந்த கீழராஜகுலராமன் கிராமத்தில் எரிச்சீஸ்வரர் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27-ந் தேதி நடக்கிறது.

இதையொட்டி நாளை (புதன்கிழமை) விக்னேஸ்வர பூஜையுடன் விழா தொடங்குகிறது. நாளை காலை 5 மணி முதல் 9 மணி வரை பஞ்சகவ்ய பூஜை, மகா கணபதி ஹோமம், கோபூஜை, சுதர்சன ஹோமம் உள்பட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4.30 மணி முதல் இரவு 9 மணி வரை முதல் கால யாக பூஜை, எஜமானார்கள் காப்பு கட்டுதல், கும்ப அலங்காரம் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

நாளை மறுநாள் (வியாழக்கிழமை) மங்கள இசை, திருமுறை பாராயணம், 2-ம் கால யாக பூஜை, 3-ம் கால யாக பூஜை உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

27-ந் தேதி காலை 4 மணி முதல் 7 மணி வரை 4-ம் கால பூஜை, கடம் புறப்பாடு ஆகியவை நடக்கிறது. தொடர்ந்து 7.30 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் எரிச்சீஸ்வர அய்யனார் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. 11 மணிக்கு மகா அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு புஷ்பாஞ்சலி, மகா தீபாராதனை நடக்கிறது.

விழாவில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொள்கிறார்.

விழாவில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, உதயகுமார், ராஜேந்திரபாலாஜி, எம்.எல்.ஏ.க்கள் ராஜவர்மன், சந்திரபிரபா, தங்கப்பாண்டியன், மாணிக்கம் தாகூர் எம்.பி., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன், கலெக்டர் கண்ணன், போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மயில்சாமி,ஒன்றிய செயலாளர் வேல்முருகன், நாட்டாண்மை பிரவேஷ், எஸ்.பி.கே. குழுமம் செய்யாதுரைத்தேவர், ராஜபாளையம் ராம்கோ குழுமம் வெங்கட்ராமராஜா, கீழராஜகுலராமன் பொன்னுச்சாமி தேவர், ஊராட்சி தலைவர் காளிமுத்து, சிவகாசி கே.எஸ்.கந்தசாமி மற்றும் பலர் கலந்து கொள்கின்றனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை எரிச்சீஸ்வரர் அய்யனாரப்பன் அறக்கட்டளை குழு தலைவர் குருமூர்த்தி, சென்னை பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினரும், செயலாளருமான போடி சுப்புராஜ், பொருளாளர் கணேஷ்குழந்தை, துணைத்தலைவர் குமரவேல்சாமி, துணை செயலாளர் வைரம், துணை பொருளாளர் மதன், சட்ட ஆலோசகர் ரத்தினவேல் பாண்டித்துரை மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News