ஆன்மிகம்
தேரிவிளை குண்டல் முருகன்

தேரிவிளை குண்டல் முருகன் கோவிலில் சூரசம்ஹார விழா நாளை நடக்கிறது

Published On 2020-11-19 06:52 GMT   |   Update On 2020-11-19 06:52 GMT
கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளைகுண்டலில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழாவில் 6-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது.
கன்னியாகுமரி அருகே உள்ள தேரிவிளைகுண்டலில் முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 15-ந்தேதி முதல் தொடங்கி 24-ந்தேதி வரை தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் காலையில் விசேஷ பூஜை, சிறப்பு வழிபாடுகள், இரவு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் ஆகியவை நடைபெற்று வருகிறது.

விழாவில் 6-ம் நாளான நாளை (வெள்ளிக்கிழமை) சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இதையொட்டி நாளை காலை விசேஷ பூஜை, அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடக்கிறது. பின்னர் மாலை 6 மணிக்கு சூரசம்ஹாரம் நிகழ்ச்சியும், 24-ந்தேதி இரவு 7 மணிக்கு ஆறாட்டு நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை தேரிவிளைகுண்டல் முருகன் கோவில் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News