ஆன்மிகம்
அய்யனார்

ராம அய்யனார் கோவில் குடமுழுக்கு பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2020-11-12 03:58 GMT   |   Update On 2020-11-12 03:58 GMT
வேதாரண்யத்தை அடுத்த வடகட்டளை மறைஞாயநல்லூர் கிராமத்தில் ராமஅய்யனார் மற்றும் தூண்டிகரா கோவிலில் குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
வேதாரண்யத்தை அடுத்த வடகட்டளை மறைஞாயநல்லூர் கிராமத்தில் ராமஅய்யனார் மற்றும் தூண்டிகரா கோவில் உள்ளது. இக்கோவிலின் குடமுழுக்கு நடைபெற்றது. இதையொட்டி விக்னேஸ்வர பூஜை மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

பின்னர் புனித நீர் அடங்கிய கலசங்கள் ஆனந்த சிவாச்சாரியார் தலைமையில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கலசத்திற்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து குடமுழுக்கு நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக கேசவன் குழுவினரின் நாதஸ்வர இன்னிசை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Tags:    

Similar News