அழகர்மலை உச்சியில் உள்ள சோலைமலை முருகன் கோவிலில் ஐப்பசி மாத கார்த்திகை விழாவையொட்டி மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தது.
இதைதொடர்ந்து உற்சவர் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், விபூதி சந்தனம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. அரசு வழிகாட்டுதல்படி பக்தர்கள் கலந்து கொண்டு நெய் விளக்குகள் ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர்.
இதைபோலவே அலங்காநல்லூர் அய்யப்பன் கோவில் உள் பிரகாரத்தில் அமைந்துள்ள பாலமுருகன் சன்னதியிலும் பக்தர்கள் வழிபாடு செய்தனர்.