ஆன்மிகம்
சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்

ஐப்பசி பவுர்ணமியையொட்டி சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்

Published On 2020-10-31 04:28 GMT   |   Update On 2020-10-31 04:28 GMT
அன்னாபிஷேகமானது ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பவுர்ணமியான இன்று (சனிக்கிழமை) சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.
அபிஷேகப் பிரியரான சிவனுக்கு செய்யப்படும் அபிஷேகங்களில் எல்லாம் தலைசிறந்தது அன்னாபிஷேகமாகும். இந்த அன்னாபிஷேகமானது ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி தினத்தன்று நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் பவுர்ணமியான இன்று (சனிக்கிழமை) சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.

மாதம் ஒரு பவுர்ணமி வந்தாலும் ஐப்பசி மாதம் வரும் பவுர்ணமி அன்று தான் சந்திரன் பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமி ஆகும். தேவி அன்னபூரணி சிவபெருமானுக்கு அன்னமிட்டதும் ஐப்பசி மாதம் பவுர்ணமி தினத்தில் தான். இதன் காரணமாக அனைத்து சிவாலயங்களிலும் சிவனின் லிங்கத்திருமேனிக்கு சமைக்கப்பட்ட அரிசி சாதம் சாத்தப்பட்டு மேல்பகுதியில் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்படுவது உண்டு.

இதேபோல திருச்சி, கரூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் உள்ள முக்கிய சிவன் கோவில்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது. அன்னாபிஷேகம் நடந்து முடிந்த பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்படும். தீபாராதனைக்கு பின்னர் அன்னாபிஷேகம் களையப்பட்டு அவை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இந்த பிரசாதத்தை வாங்கிசாப்பிட்டால் நோய் நொடி அண்டாது என ஐதீகமாக நம்பப்படுகிறது.
Tags:    

Similar News