ஆன்மிகம்
6-ம் நாள் நவராத்திரி விழா

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா

Published On 2020-10-23 06:21 GMT   |   Update On 2020-10-23 06:21 GMT
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா சிறப்பாக நடைபெற்றது.
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 6-ம் நாள் நவராத்திரி விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் சார்பில் அம்மனுக்கு 8 வகையான வாசனை திரவியங்களால் அஷ்டாபிஷேகம் நடந்தது. காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், பின்னர் 11.30 மணிக்கு அம்மன் வைரக்கிரீடம், வைரக்கல் மூக்குத்தி அணிவிக்கப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இரவு 8 மணிக்கு பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலின் வெளி பிரகாரத்தை வலம் வந்தார். இந்த நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநில துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News